செய்திகள்

வழக்கின் போக்கையே மாற்றி விட்டனர்- உஷாவின் கணவர் ராஜா பேட்டி

உஷாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த பிறகு, வழக்கின் போக்கையே மாற்றி விட்டனர் என்று அவரது கணவர் ராஜா கூறினார்.

திருச்சி:

உஷாவின் கணவர் ராஜா கூறும் போது, குழந்தை பெற்று கொள்வதற்காக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தோம். சில நாட்கள் சிகிச்சையை நிறுத்திவிட்டோம். இடையில் ஒரு நாள் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என உஷா என்னிடம் கூறினார். எனவே சந்தோ‌ஷத்தில் இருந்தோம்.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்க்கலாம் என்றிருந்தோம். ஆனால் அதற்குள் இறந்து விட்டார். உஷாவின் கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. என் மனைவி உயிருடன் இல்லை. சாட்சியும் இல்லை என்பதால் ஆளாளுக்கு ஏதேதோ பேசுகின்றனர். உஷாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த பிறகு, வழக்கின் போக்கையே மாற்றி விட்டனர். போலீசார் எது வேண்டுமானாலும் சொல்லி கொள்ளட்டும் என்றார். #Tamilnews

SCROLL FOR NEXT