அடுத்த மாதம் 21-ந்தேதி மொனாக்கோவில் ஐஏஏஎஃப் டைமண்ட் லீக் தடகளம் நடைபெறுகிறது. இதில் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் கலந்து கொள்கிறார். இந்த தகவலை போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு மொனாக்காவில் ஓடியபின்னர், தற்போது 7 ஆண்டுகளுக்குப்பிறகு மொனாக்கோவில் ஓட இருக்கிறார். 2011-ல் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை 9.88 வினாடிகள் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.