செய்திகள்

ஓய்வு கொண்டாட்டத்திற்காக பாரில் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்த உசைன் போல்ட்

லண்டனில் ஓய்வு பெற்றதை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பாருக்குச் சென்ற உசைன் போல்ட், 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.

மாலை மலர்

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்தான் தன்னுடைய கடைசி ஓட்டம் என்று அறிவித்திருந்தார். இந்த ஓட்டத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமே பிடித்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்வில்லை. 4X100 மீட்டர் ஓட்டத்தில் காயம் காரணமாக டிரக்கிலேயே விழுந்தார்.

மிகப்பெரிய சாதனைகளோடு விடைபெற நினைத்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. என்றாலும் தனது ஓய்வை நண்பர்களுடன் பாருக்கு சென்று ஜாலியாக கொண்டாடினார்.