செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த வாரம் மோடியை சந்திக்கிறார்

நான்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், அடுத்த வாரம் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். #USVicePresident #MikePence #Modi

மாலை மலர்

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், நவம்பர் 11 முதல் 18 ஆம் தேதி வரை ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இந்த சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரில் நடைபெற உள்ள அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.

தனது நான்கு நாடுகளின் சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் மோடியையும் மைக் பென்ஸ் சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.