செய்திகள்

மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு

உயிரினங்களில் வாழ்முறைக்கு உதவிடும் மரபணு பற்றிய கண்டுபிடிப்புக்காக மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மாலை மலர்

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 2017-ம் ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு பெறுபவர் பெயர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று வெளியான அறிவிப்பில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஜெப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ. யாங் ஆகிய அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.