செய்திகள்

அமெரிக்காவில் 'ஒபாமா கேர்' திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

மாலை மலர்

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்யப்பட்டு. அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

புதிய மசோதாவை வெற்றி பெற செய்யும் வாக்கெடுப்பில் குடியரசு கட்சி தேவையான அளவு வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாரும் வாக்களிக்கவில்லை.