அரபு நாடுகளான ஈராக், சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பக்கத்து நாடுகள் சிலவற்றிலும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் புகுந்து சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதேபோல் ஏமன் நாட்டில் அல்பேதா மாகாணத்தின் சில பகுதிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். அந்த இடங்களில் அமெரிக்கா ஏற்கனவே சில முறை தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த 16-ந் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 50 பேர் கொல்லப்பட்டனர்.