செய்திகள்

முன் அனுமதியில்லாமல் வெளியே சுற்றக் கூடாது - அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாக். அரசு கிடுக்கிப்பிடி

வெளியுறவு அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல் வெளியே சுற்றக்கூடாது என அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. #USDiplomats #Pakistan

மாலை மலர்

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது சுமூகமான உறவு இல்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி சென்ற கார் மோதியதில் இருவர் பலியாகினர்.

இதனை அடுத்து, அந்த அதிகாரியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் கராச்சியில் உள்ள பழங்குடிகள் பகுதிக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.

கார் விபத்து ஏற்பட்ட காட்சி

அதுவும், பயண தேதியில் இருந்து 5 தினங்களுக்கு முன்னர் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மே மாதம் 1-ம் தேதி முதல் இந்த கட்டுபாடுகள் அமலுக்கு வந்தது.