கோப்பு படம் 
செய்திகள்

கணவர் கண்முன் இளம்பெண் கற்பழிப்பு - 4 பேர் கும்பல் அட்டூழியம்

உத்தரபிரதேசம் அருகே கணவர் கண்முன் இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

பிஜ்னோர்:

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், டாக்டரை பார்ப்பதற்காக தனது கணவருடன் பிஜ்னோருக்கு சென்றார்.

பின்னர் ரிக் ஷாவில் வீடு திரும்பினார். அப்போது 4 பேர் கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது ரிக் ஷாவை வழி மறித்து கணவரை தாக்கி மிரட்டிய அந்த கும்பல் ரிக் ஷாவில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கதறினார். அவரது கணவர் கும்பலை தடுக்க முயன்றார். ஆவேச மடைந்த கும்பல் அவரை ஆயுதங்களால் தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அந்த கும்பல் கணவர் கண் முன்பே துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணை கற்பழித்தனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த உஸ்மான், இமாமுதீன், ரஷீத் மற்றும் ரியாசுப் ஆகிய 4 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் புலந்த்ஸ்கர் பகுயிலும் இதே போல 31 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் சென்ற போது 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.