செய்திகள்

உ.பி.யில் சுவாரசியம்: மீண்டும் எருமையை தேடும் போலீசார்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் எருமை மாடுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் எருமை மாடுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்காவ் சட்டசபை தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சுரேஷ் ராஹி. இவருக்கு சொந்தமான பண்ணையில் ஏராளமான மாடுகள் வளர்ந்து வருகின்றன.

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ.வின் பண்ணையில் இருந்து தாயும் கன்றுமான 2 எருமை மாடுகள் காணாமல் போயின.

இதுகுறித்து எம்.எல்.ஏ. கோட்வாலி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாடுகளை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டில் உ.பி.யின் சமாஜ்வாடி கட்சியின் மந்திரி அசம்கானின் காணாமல் போன மாடுகளை போலீசார் 36 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.