செய்திகள்

விடுமுறை கொடுக்காவிடில் மனைவி ஓடிப் போய்விடுவாள் - போலீஸ் சூப்பிரடெண்டுக்கு கான்ஸ்டபிள் கடிதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது.

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் தர்மேந்திர சிங். அவர் கடந்த நான்கு மாதமாக விடுப்பு எடுக்காமலும், மனைவியை நேரில் சென்று பார்க்காமலும் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி, 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால், எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பு கேட்டு தனது மேலதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார். அதில், 10 நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்கு செல்லவில்லை என்றால், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள். ஆதலால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது நிலைமையையும், விடுப்பிற்கான காரணத்தின் தீவிரத்தையும் உணர்ந்த மேலதிகாரி, உடனடியான அனுமதி வழங்கினார். இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளின் விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. #tamilnews

SCROLL FOR NEXT