லக்னோ:
உத்தரபிரதேசம் மாவட்டம் அசாம்கார் மாவட்டத்தில் உள்ள ஃபரிகா கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஷாய். அதே கிராமத்தை சேர்ந்த தலித் சிறுமியிடம் ஷாய் அடிக்கடி செல்போன் நம்பர் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளான். இந்நிலையில், இன்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற ஷாய் மீண்டும் செல்போன் நம்பர் கேட்டுள்ளான்.
ஆனால், நம்பரைத் தர சிறுமி மறுத்ததால் ஷாய் சிறுமியை அடித்து தாக்கிவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீப்பற்றி எரிந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் தீக்காயத்தில் இருந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
80 சதவிகித தீக்காயங்களுடன் சிறுமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக முகமது சாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews