ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் 
செய்திகள்

மத்திய பிரதேச ஆளுநராக ஆனந்திபென் பட்டேலுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய பிரதேச மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆளுநர் பொறுப்பை உ.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கவனிப்பார்.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (வயது 85) கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

லால்ஜி டாண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மத்திய பிரதேச ஆளுநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார். லால்ஜி மறைந்ததையடுத்து, மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு ஆனந்திபென் பட்டேலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆன்ந்திபென் பட்டேல் ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.