செய்திகள்

உ.பி. அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து: சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்த யோகி

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாலை மலர்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.