செய்திகள்

உ.பி.: கோரக்பூர் ரெயில் நிலையம் அருகில் இரவு முகாம்களில் யோகி ஆதித்யாநாத் திடீர் சோதனை

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள இரவு முகாம்களில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திடீரென சோதனை நடத்தினார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்டது இரவு முகாம்கள். இங்கு தங்குபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோரக்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள இரவு முகாம்களுக்கு முதல் மந்திரி ஆதித்யநாத் நேற்று இரவு திடீரென சென்றார்.

அந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து அங்கு தங்கியிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஏற்கனவே, கடந்த 3-ம் தேதி லக்னோவின் பல்ராம்பூர் மருத்துவமனை அருகில் அமைந்துள்ள இரவு முகாம்களுக்கு சென்று முதல் மந்திரி ஆதித்யநாத் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.