செய்திகள்

உ.பி. உள்ளாட்சித் தேர்தல்: 14 இடங்களில் பி.ஜே.பி. முன்னிலை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பி.ஜே.பி. 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மாலை மலர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி தொடங்கியது.

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பி.ஜே.பி. முன்னிலையில் உள்ளது. மோராதாபாத் பகுதியில் பி.ஜே.பி. மேயர் 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 16 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் 14 இடங்களில் பி.ஜே.பி. முன்னிலையில் உள்ளது. மோராதாபாத், அயோத்யா, ஃபைசாபாத், வாரனாசி, பிரோசாபாத், ஷாரான்பூர், லக்னோ, கைசாபாத், ஆக்ரா, அலிகார், அலகாபாத், பரிலி, கான்பூர் மற்றும் மதுரா நகராட்சியில் பி.ஜே.பி. அதிக வாக்குகள் பெற்றுள்ளன.


மீருட் மாநகராட்சியில் பகுஜ்வான் சமஜ்வாடி கட்சி முன்னிலையில் உள்ளது. மதுராவில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றதற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அவரது ஆட்சிக்கு மக்கள் தங்கள் ஆதரவை அளித்து வருகிறார்கள். இன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும்.