உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது, 40 மைக்ரான்களுக்கு அதிகமான கனத்திலான பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும் தடை விதித்து கடந்த 2015-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது.
எனினும், இந்த உத்தரவு அங்கு பரிபூரணமாக கடைபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் தடை விதித்து யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.