செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமை பூசாரி) திருச்சூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்:

சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு முன்பு குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு இன்று நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற நேர்காணலுக்கு பிறகு இன்று நடைபெற்ற இந்த குலுக்கலின்போது திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக திருச்சூர் மாவட்டம் கோடக்கரா பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சபரிமலையில் உள்ள மல்லிகாபுரம் கோயிலின் மேல்சாந்தியாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அமிஷ் நம்பூதிரி தேர்வாகியுள்ளார்.

இவர்கள் இருவரும் மலையாள மாதமான விரிச்சிகோம் மாதம் முதல்நாள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அடுத்த ஓராண்டுவரை இந்த கோயில்களின் மேல்சாந்திகளாக செயல்படுவார்கள்.