செய்திகள்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - பாதிக்கப்பட்ட இளம்பெண் கோர்ட்டில் வாக்குமூலம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் லக்னோ கோர்ட்டில் இன்று புதிதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று லக்னோ மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புதிதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர் அளித்த வாக்குமூலத்தில் எம்.எல்.ஏ பெயரை அப்பெண் சேர்க்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் அவர் புதிய வாக்குமூலம் இன்று அளித்தார். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் மைனர் இல்லை என தெரிய வந்துள்ளதால் எம்.எல்.ஏ மீதான போஸ்கோ வழக்கை (சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கு) திரும்பப்பெற சி.பி.ஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #TamilNews

SCROLL FOR NEXT