செய்திகள்

பல்கலைக்கழக துணைவேந்தர் கைது எதிரொலி: சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் அவசர ஆலோசனை

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட சுயநிதி கல்லூரி நிர்வாகத்தினர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 107 தனியார் உறுப்பு கல்லூரிகள் உள்ளன.

துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் இதுபற்றி ஆலோசிக்க பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட சுயநிதி கல்லூரி நிர்வாகத்தினர் இன்று கோவையில் கூடி அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

இதில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 18 சிண்டிகேட் உறுப்பினர்கள் உள்ளனர். இதுதான் அதிக அதிகாரம் உள்ள அமைப்பாகும். இதில் 13 பேர் நியமன உறுப்பினர்கள். 5 பேர் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

இந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் விரைவில் கூட்டப்பட இருக்கிறது. அதில் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்ய நிர்வாகக்குழு கூட்டத்தை அமைக்க வேண்டி இருப்பதால் அதற்கான அனுமதியை அளிக்குமாறு தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அரசு அனுமதி அளித்த பின்னர் சிண்டிகேட் கூட்டம் கூட்டி பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது தொடர்பாக முடிவு செய்ய உள்ளனர். #tamilnews

SCROLL FOR NEXT