செய்திகள்

நோ சிக்னல்...ஏணி போட்டு மரத்தின் மீது ஏறி போன் பேசிய மத்திய மந்திரி

மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தனது தொகுதியில் உள்ள ஊரில் சிக்னல் இல்லாத காரணத்தால் மரத்தின் மீது ஏணி போட்டு மேலே ஏறி போன் பேசியுள்ளார்.

ஜெய்ப்பூர்:

மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தனது தொகுதியில் உள்ள ஊரில் சிக்னல் இல்லாத காரணத்தால் மரத்தின் மீது ஏணி போட்டு மேலே ஏறி போன் பேசியுள்ளார்.

மத்திய நிதித்துறை இணை மந்திரியாக உள்ள அர்ஜுன்ராம் மேக்வால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான பிக்கானீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சிற்றூருக்கு சென்ற அவருக்கு, செல்போனில் தொடர்பு சரிவரக் கிடைக்காததால், மரத்தில் ஏணியை சாய்த்து வைத்து அதில் ஏறி நின்று போன் பேசி உள்ளார்.

மரத்தின் மீது ஏறி அவர் போன் பேசுவதை கண்டு அவரை சுற்றி இருந்த மக்கள் வேடிக்கையுடன் பார்த்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இது போன்ற குக்கிராமங்களில் தகவல் தொடர்பு வசதிகள் இந்த அளவுக்குதான் உள்ளன.

SCROLL FOR NEXT