ராம்விலாஸ் பஸ்வான் 
செய்திகள்

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லி உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய மந்திரியும், லோக்ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை சார்பில் முழுமையான தகவல் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கட்சி பணிகளை பஸ்வானின் மகன் சிரக்பஸ்வான் மேற்கொண்டுள்ளார்.