மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் 
செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவர் ஆகிறார், ஹர்ஷவர்தன்

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

உலக சுகாதார அமைப்பின் முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான உலக சுகாதார சபையின் கொள்கைகளை அமல்படுத்த 34 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட நிர்வாக வாரியம் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாரியத்தின் தலைவர், சுழற்சி முறையில் மாற்றப்படுவது வழக்கம். கடந்த ஓராண்டாக தலைவராக இருந்த ஜப்பான் நாட்டின் ஹிரோகி நகாடானிக்கு பதிலாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

SCROLL FOR NEXT