கோப்பு படம் 
செய்திகள்

அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் சுமார் 5,200 பெரிய அணைகள் உள்ளன. 450 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர அணைகளும் உள்ளன. 

இவை அனைத்தின் பாதுகாப்புக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க தேசிய அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு கூறியது. 

இந்த மசோதாவால் தழிழகத்திற்கு பாதிப்பு அதிகம் ஏற்படும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT