செய்திகள்

மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. #MekedatuDam #KaveriWaterDispute

மாலை மலர்

பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த எதிர்ப்புக்கு மத்தியில் காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்டப்பணிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.