ஆண் பிணம் 
செய்திகள்

நாகூர் தர்காவில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

நாகூர் ஆண்டவர் தர்காவில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகூர் ஆண்டவர் தர்காவில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.