தேன்கனிகோட்டை:
தேன்கனிகோட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் தேன்கனிகோட்டை கிராம நிர்வாக அதிகாரி முருகனிடம் தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி தேன்கனிகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கை பதிவு செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்க்கு விரைந்து இறந்த முதியவரின் சடலத்தை பார்வையிட்டு விசாரனை செய்ததில் 65 வயதுடைய முதியவர் என்பதும், இவர் அப்பகுதியில் பிச்சைகாரன் என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து மேலும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரனை செய்து வருகிறார்.