செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மர்ம நபர்கள் இன்று வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. #JKBank #CashLoot

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தின் குய்மோ பகுதியில் ஜம்மு காஷ்மீர் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் துப்பாக்கிகளை காட்டி மிரட்டினர். அதன்பின்னர், வங்கியில் இருந்த 3.20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JKBank #CashLoot