செய்திகள்

தீவிரவாத ஒழிப்புக்காக புதிய அலுவலகம் கட்ட ஐ.நா. பொதுசபை ஒப்புதல்: இந்தியா வரவேற்பு

தீவிரவாத ஒழிப்பு தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ஐ.நா. பொதுசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

வாஷிங்டன்:

தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதன் பொதுச் செயலாளராக உள்ளவர்கள் அவ்வவ்போது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தீவிரவாத ஒழிப்பு தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ஐ.நா. பொதுசபை அனுமதி அளித்துள்ளது. 

193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொது சபை கடந்த ஜூன் 15-ம் தேதி இது தொடர்பான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஐ.நா. சபை மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதீன் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு கூறுகையில், தீவிரவாத எதிர்ப்புக்காக புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது எதிர்பார்க்கப்பட்ட எங்களது முதல் முயற்சி என்றார். 

மேலும், ஆப்கான் தலைநகரில் ஐ.நா. பொதுச் செயலாள் அந்தோனியா கட்டாரெஸ், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்கும் என்று நேற்று பேசியதையும் அக்பரூதீன் குறிப்பிட்டார்.