குமரகுரு எம்.எல்.ஏ. 
செய்திகள்

உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 379 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 497 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரகுரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.