விபத்து 
செய்திகள்

உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ்சில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ்சில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை காந்திபுரத்தில் இருந்து உக்கடம் வழியாக வெள்ளலூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் இன்று காலை கோவை காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டு வெள்ளலூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் உக்கடம் பஸ் நிலையத்திற்குள் சென்றபோது சுமார் 48 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பஸ்சின் குறுக்கே விழுந்தார். இதில் அவர் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து பஸ் நிலையத்தில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.