லண்டன்:
அரியானா மாநிலத்தின் சினிமா சாமியாரான குர்மீத் ராம் ரஹிம் சிங் தன் ஆசிரமத்தில் உள்ள இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாக நடைபெற்று வந்த விசாரணையில் நேற்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்துள்ளது. அரியானா - பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குர்மீத் ராம் ரஹிம் சிங்
இதைத்தொடர்ந்து, வரும் 28-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருப்பதால் கலவரங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பிரட்டன்வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுருத்தியுள்ளது.