உடுமலை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள முள்ளங்கிவலசு கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதைகண்ட சிலர் இது குறித்து உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அங்கு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இது குறித்து தீயணைப்புதுறையினர் கூறுகையில், விளைநிலம் வழியே சென்ற மின்கம்பியில் தீ பிடித்து விபத்து நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.