உத்தவ் தாக்கரே 
செய்திகள்

தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் ராஜீவ்காந்தி: உத்தவ் தாக்கரே புகழாரம்

ராஜீவ்காந்தி நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர். அந்த நேரத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளின் பலனை நாம் இப்போது காண்கிறோம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர். அந்த நேரத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளின் பலனை நாம் இப்போது காண்கிறோம். பயங்கரவாதத்தையும், வன்முறையையும் மனித வாழ்க்கையில் இருந்து ஒழிக்க வேண்டும் என உறுதிமொழி எடுப்போம். அதை அடைய நாம் பாடுபட வேண்டும். அதுவே ராஜீவ்காந்திக்கு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT