செய்திகள்

குமரி வர்த்தக துறைமுகத்தை எதிர்ப்பதால் கைது செய்ய சதி- உதயகுமார் பேட்டி

வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டங்களில் நான் பங்கேற்பதால் என்னை கைது செய்ய பொன். ராதாகிருஷ்ணன் தூண்டி விடுகிறார் என்று உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். #udayakumar

மாலை மலர்

நாகர்கோவில்:

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான உதயகுமார் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-

அணுஉலை எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் என்னை இடிந்தகரை பகுதிக்கு சென்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறி உள்ளார். 2 நாட்களுக்கு முன்புதான் நான் இடிந்தகரை சென்று வந்தேன். மத்தியமந்திரியும் அதுபோல குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ மக்களை சந்திக்கட்டும். அவரை அங்கு அழைத்துச்செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டங்களில் நான் பங்கேற்பதால் என்னை கைது செய்ய அவர் தூண்டி விடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews