இந்திய ஜூனியர் அணி தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுதான். கடந்த 14 மாதமாக கடின உழைப்பின் மூலம் ஜூனியர் அணியை தயார் செய்துள்ளனர். இந்திய அணி சாம்பியன் பட்ம் வென்றதும், தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டை புகழாத நபர்களே கிடையாது.
ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்கான தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளார் என முன்னாள் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடியும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.