செய்திகள்

U-19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி- இலங்கைக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #IND19vSL19

அதன்பின் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள்.

இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். அதேசமயம் அதிரடியாக ரன்கள் குவிக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்தது. 79 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ராவத் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 113 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 85 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 43 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

கேப்டனும் விக்கெட் கீப்பரும் ஆன சிம்ரான் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஆயுஷ் படோனியும் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.