5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெற்று முடிந்தன.
இன்று (28ம் தேதி) நடைபெற்ற ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பரிவில் உள்ள பெங்களூரு புல்ஸ் அணியும், ‘ஏ’ பிரிவில் உள்ள யூ மும்பா அணியும் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 42-30 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்றது. மும்பை அணியின் காசிலிங் ஆட்கே அதிரடியாக விளையாடி 17 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
அதன்பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 44-22 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி கேப்டன் ராகுல் சவுத்திரி 15 தொடுபுள்ளிகள் எடுத்தனர்.