செய்திகள்

அன்னூரில் இன்று அதிகாலை சந்தன மரம் வெட்டிய 2 வாலிபர்கள் கைது

அன்னூரில் இன்று அதிகாலை சந்தன மரம் வெட்டிய 2 வாலிபர்களை கைது செய்த சிறுமுறை வனத்துறை ரேஞ்சர் மனோகரன் அவர்களுக்கு தலா ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மாலை மலர்

அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பூலுவபாளையம். இங்கு வசிப்பவர் சிவசாமி மகன் சுரேஷ். இவரது வீட்டு முன்பு 2 சந்தன மரங்கள் 10 வருடமாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டினர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தனர். அப்போது சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் பேட்டனர்.

சத்தம் கேட்டு மற்றவர்களும் எழுந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் தப்பி ஓடமுயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அன்னூர் வடுகபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (வயது 35), அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் மகன் கருப்புசாமி (41) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து சிறுமுகை வனத்துறை ரேஞ்சர் மனோகரன் அவர்களுக்கு தலா ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்தார். #tamilnews