கைது 
செய்திகள்

கோவையில் பிக்பாக்கெட் அடித்த 2 வாலிபர்கள் கைது

கோவையில் பிக்பாக்கெட் அடித்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

சிங்காநல்லூர்:

கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 44). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் எனது நண்பருடன் அங்கு உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்புவதற்காக அரசு பஸ்சில் வந்தார்.

அப்போது அவரது அருகில் இருந்த ஒரு வாலிபர் ராஜமாணிக்கத்தின் பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடி தப்பி ஓட முயற்சி செய்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் சத்தம்போட்டு தனது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து ஆலந்துறை போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வாலிபர் உக்கடம் பகுதியை சேர்ந்த ‌ஷகில் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

கோவை நீலிகோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வஞ்சிகுமார் (30). டிரைவர். சம்பவத்தன்று இவர் எஸ்.எச்.எஸ்.ஐ காலனி பகுதியில் உள்ள ஒரு குடோனில் தனது செல்போனை சார்ஜ் போடுவதற்காக வைத்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.

இதைக்கண்ட ரஞ்சித்குமார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.