செய்திகள்

திசையன்விளை அருகே 2 பெண்கள் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை

திசையன்விளை அருகே 2 பெண்கள் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

நெல்லை:

திசையன்விளை அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுடலை முத்து மகன் இசக்கிமுத்து (வயது19) கூலி வேலை செய்து வந்த இசக்கிமுத்து, தனக்கு உடனடியாக திருணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அவர்கள் அண்ணனுக்கு திருமணம் முடித்த பிறகு தான் உனக்கு திருமணம் என்று கூறிவிட்டனர்.

இதனால் மனம் உடைந்த இசக்கிமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திசையன்விளை அருகே உள்ள விஜயநாராயணம் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மனைவி பகவதி (35). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டார். அவரை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பகவதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாங்குனேரி அருகே உள்ள சென்னிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகள் மகேஸ்வரி (18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மகேஸ்வரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews