ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற வீரர்கள் கட்டிடத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகளை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து, தீவிரவாதிகளை நோக்கி வீரர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தீவிரவாதிகள் கட்டிடத்தில் பதுங்கியுள்ளதால், இன்னும் துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.