செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையிலான சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

#ShopianEncounter