செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், தீவிரவாதிகள் சரணடைய மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து, அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரு ஏ.கே.47 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து என்கவுண்டர் நடத்தி வருகின்றனர். இதில் பலியானவர்களின் விவரங்கள் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT