செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பானிஹால் பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் கைது - போலீசார் அதிரடி

ஜம்மு-காஷ்மீரின் பானிஹால் பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகளை கைது செய்தனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பானிஹால் பகுதியில் இன்று காலை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு தீவிரவாதிகள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் ஆரிப் மற்றும் கசான்பர் என அடையாளம் தெரிந்தது. மேலும், அவர்கள் கடந்த 20-ம் தேதி துணை ராணுவ படையினர் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பானிஹால் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் உள்ளூரை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளோம். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என்றனர்.

SCROLL FOR NEXT