சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலையில் டால் முகாம் அருகே 2 நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடியதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இதனால் உஷாரான வீரர்கள், அந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. கொல்லப்பட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.