செய்திகள்

சென்னையில் நடக்க இருந்த இரண்டு ரஞ்சி ஆட்டங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்

சென்னையில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதையடுத்து சென்னையில் நடக்க இருந்த 2 ரஞ்சி கிரிக்கெட் ஆட்டங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து ரஞ்சி கிரிக்கெட் தொடரில், சென்னையில் நடக்க இருந்த தமிழக அணிக்குரிய இரு ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றும்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக்கொண்டது. அதை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி தமிழகம்-மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இந்தூருக்கு (நவ.17-ந்தேதி தொடங்குகிறது) மாற்றப்பட்டுள்ளது. இதே போல் பரோடா அணிக்கு எதிரான ஆட்டம் வதோதராவில் (நவ.25) நடக்கிறது.