செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். #JammuKashmir #Militants #Attack

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இரவில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், மூன்று போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஜங்லாட்மண்டி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த  சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #Militants #Attack