செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாராமுல்லா காவல் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - 2 போலீசார் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காவல் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். #JammuKashmir

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காவல் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள வார்போரா காவல் சோதனைச்சாவடியில் இன்று போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை சோதனைச்சாவடி மீது வீசினர். மேலும், துப்பாக்கி சூடும் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பணியில் இருந்த இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். இதனால் அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்த போலீசாரை சக போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர். #JammuKashmir #tamilnews