மேட்டுப்பாளையம்:
சிறுமுகை நால்ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவி மேகலாவிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் விரக்தியடைந்த தர்மன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு (60). லாரி டிரைவர். இவருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனர். இதனால் விரக்தியடைந்த அய்யாவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.